சிவகாசி மேயர் அரசு மருத்துவமனைக்கு உதவி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72_ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வீல்சேர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகாசி மாநகர மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி மாநகர திமுக செயலாளர் உதயசூரியன், சிறுபான்மை அணி அமைப்பாளர் அணித்தலைவர் மரைக்காயர், துணைத்தலைவர் துணை அமைப்பாளர்கள் மாநகர நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.





