• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

டாப் நடிகையை தவிர்த்துவரும் தயாரிப்பாளர்கள்!

பெயரிலேயே உச்சத்தை தொட்ட டாப் நடிகையை தயாரிப்பாளர்கள் தற்போது கண்டுகொள்வதே இல்லையாம். ஆரம்பத்தில் நன்றாக நடிக்கிறார் என பல படங்களில் புக் ஆகி வந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததே இந்த பிரச்சனைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது! மேலும், தென்னிந்தியாவில் இருந்து புதிய நடிகைகள் வட இந்திய படங்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது தான் உண்மையான காரணம் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

பழைய வட இந்திய நடிகைகளின் பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து கமீட் ஆகி வந்த டாப் நடிகையின் சமீபத்திய படங்கள் அனைத்தும் தோல்வி கண்டதால், அவரது மார்க்கெட் ஒரேயடியாக அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. அதுமட்டுமின்றி நடிப்புக்காக மெனக்கெட்டு நடிகை செய்த செயல்களால் அவரது தோற்றம் முற்றிலுமாக வயதானவரை போல மாறிவிட்டதாகவும், அதனால் தான் அவர் நடிக்கும் படங்களை பார்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் பேசப்படுகிறது!

நம்பர் நடிகை மற்றும் சமத்து நடிகை என தென்னிந்தியாவில் இருந்து ஏகப்பட்ட புதிய திறமையான நடிகைகளின் வரவு காரணமாக டாப் நடிகைக்கு வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்துவிட்டனவாம்! இதனால், கையில் இருக்கும் சில படங்களை தவிர்த்து புதிதாக எந்தவொரு படமும் அந்த நடிகைக்கு புக் ஆகவில்லையாம்.

தன்னை வைத்து ஏற்கனவே ஹிட் அடித்த சில தயாரிப்பாளர்களை அணுக முயன்றாலும், அந்த தயாரிப்பாளர்கள் நேரிலோ அல்லது போனிலோ பேசவே மறுத்து வருகின்றார்களாம். நடிகைகளை ஓரங்கட்டும் நிலையில், தாங்களே சொந்த தயாரிப்பில் இறங்குவது வழக்கம். அதே போல தற்போது அந்த நடிகையும் சொந்த தயாரிப்பை ஆரம்பித்து படம் நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிலும் நஷ்டம் ஏற்பட்டால் தப்பிக்கவே முடியாதே என்பதால் பொறுமையாக நல்ல கதை மற்றும் இயக்குநரை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளாராம்.