திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 200 அடி நீளம் உள்ள தேசியக் கொடியின் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் தீவிரவாதிகளை அளித்து வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் தேசியக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. சுபாஷ் சந்திரபோஸ் சிலை முன்பு பா.ஜ.க மேற்கு மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் துவங்கிய பேரணி காந்தி மார்க்கெட், பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய வீதிகளின் வலம் வந்த பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஊர்வலம் நிறைவடைந்த்து. காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.
இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியை ஏந்தி வெற்றியை கொண்டாடும் வகையில் கோஷம் எழுப்பிய படி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.








