மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் தொகுதியானது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பிய முக்கியமான பகுதியாக உள்ள நிலையில் பெரியார் பாசன கால்வாய் மூலம் பேரனை முதல் கள்ளந்திரி வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது

இந்த நிலையில் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூன் மாசம் பெரியார் பாசன கால்வாய் மூலம் விவசாயத்திற்கு திறக்கப்பட்டது
சோழவந்தான் வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய விவசாய பகுதிகளான கரட்டுப்பட்டி இரும்பாடி பொம்மன் பட்டி கணேசபுரம் அம்மச்சியாபுரம் கீழ் நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம் நரிமேடு போடிநாயக்கன்பட்டி நீரேதான் மேட்டு நீரே தான் கட்டக்குளம் ஆண்டிபட்டி தனுச்சியம் அய்யங்கோட்டை உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பகுதிகளில் சுமார் 20,000 க்கும்மேற்பட்ட ஏக்கர் நெல் நடவு செய்து செப்டம்பர் மாதம் அறுவடைக்கு தயாராக இருந்தது
இந்த நிலையில் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்வதற்கு தேவையான அளவு கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்காததால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்தனர்
இதில் உச்சகட்டமாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களை மூட்டையாகப் பிடிக்கட்டும் அதை குடோன்களுக்கு கொண்டு செல்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டிய சம்பவங்களும் அரங்கேறியது
இதனால் கொள்முதல் நிலையங்களில் சுமார் 20,000 முதல் 30,000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்த நிலையில் காணப்பட்டது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கள் தேக்கம் அடைந்ததால் பல்வேறு பகுதிகளில் வயல்களில் அறுவடை செய்யப்படாமலும் நெல்கள் வயல்களில் காய்ந்த நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக நெல் வயல்களில் மழைநீர் புகுந்ததால் பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் அழுகி சேதம் அடைந்த நிலையில் அதிலும் விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்தனர்.
கொள்முதல் நிலையங்களிலும் உள்ள நெல்கள் கொள்முதல் செய்யப்படாத நிலையில் மழை நீரில் நனைந்து முளைக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு அதன் காரணமாகவும் விவசாயிகள் பல்வேறு நஷ்டங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கட்டக்குளம் ஆண்டிபட்டி போடிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் பாதிக்கப்பட்ட நெல் மாதிரிகளை எடுத்துச் சென்ற நிலையில் அதன் பின்னரும் கொள்முதல் நிலையங்களில் தேங்கிய நெல்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டுமென போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது வேதனையை தருகிறது.
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கரட்டுப்பட்டி மேல் நாச்சிகுளம் கீழ் நாச்சிகுளம் பொம்மன் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் சாலை மறியல் செய்தது விவசாயத்திற்கு இந்த அரசு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு ஒரு சான்றாகவே கூறப்படுகிறது.
மேலும் கொள்முதல் நிலையங்களிலும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
கொள்முதல் செய்யும் வரை கொள்முதல் நிலையங்களை விட்டு வீட்டிற்கு செல்ல மாட்டோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் சேதமடைந்த நெல்களுக்கு உரிய நிவாரணங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் மேலும் அதிகாரிகள் இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் அவர்களுக்கு உரிய கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை
என கோரிக்கை விடுத்துள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)