• Thu. Apr 24th, 2025

கால்பந்தில் பார்வைத் திறன் குன்றியோருக்கான போட்டியின் பரிசளிப்பு விழா..,

ByPrabhu Sekar

Mar 17, 2025

தேசிய அளவில் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்தால் நல்ல திறன் வெளிப்படும்
2 ஜி கே விரைவு கால்பந்தில் பார்வைத் திறன் குன்றியோருக்கான போட்டியின் பரிசளிப்பு விழாவில் குத்துச்சண்டை போட்டியில் ஒலிம்பிக் சென்ற வீரர் தேவராஜ் பேட்டி:-*

பார்வை குறைபாடு உள்ள வீளையாட்டு வீரர்களுக்கான 2 ஜி.கே விரைவு கால்பந்து அணிக்கு 2 கோல் கீப்பர்கள் வீதம் விளையாடப்படும் புதிய வகை கால்பந்து போட்டி

ஆலந்தூர் மான்ட்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பங்குபெற்ற 4 அணிகளின் முடிவில் இறுதிப் போட்டியில் நீல அணி 8-0 என்ற கோல்கள் கணக்கில் சாம்பல் நிற அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குத்து சண்டை ஒலிம்பியனும், தென்னக ரயில்வே விளையாட்டு அதிகாரியுமான வி. தேவராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2ஜி கே புதிய வகை கால்பந்து போட்டி அதிவேகமாகவும் வீரர்களை எப்போதும் ஆடுகளத்துக்குள் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் வைத்துக் கொள்ளும் வகையில் உள்ளது.

பார்வை திறன் குன்றியோர் மிகவும் உற்சாகமாக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

பார்வை திறன் குறைபாடு உடையோர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழகத்துக்கு பெருமை தேடித் தருகின்றனர் . அதுபோல இந்த கால்பந்து விளையாட்டிலும் மிகச்சிறந்து விளங்கி பல பதக்கங்களை பெற்றுத் தர வேண்டும் என்று இந்த நேரத்தில் அவர்களை வாழ்த்துகிறேன். இவர்களது முயற்சிக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் என்றும்,

தமிழகத்தில் தற்போது விளையாட்டு துறைக்கு அரசு முன்வந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது, பயிற்சி அளிப்பது, விளையாட்டு திடல் என ஆரம்பித்து வெற்றி பெரும் வீரகளுக்கு ரொக்கப்பரிசு அளித்து பாராட்டுகிறது. அதே வேளைதில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கு விளையாட்டு வீரர்களுக்கு சென்று வருவது ரெயில் போக்குவரத்து முக்கியாக உள்ளது. இதனால் அவர்களின் பயிற்சி, உணவு முறை பாதிப்பால் பதிப்பு அடைகிறார்கள். இதனால் விமான போக்குவரத்து தமிழ்நாடு அரசு ஏற்படுத்திஊக்கப்படுத்த வேண்டும். அதனால் நாட்டிகாக பதக்கம் வெல்வதில் தமிழக விளையாட்டு வீரர்கள் திறமையை முழு அளவில் வெளிப்படுத்துவார்கள் என்றார்.