சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த அனைத்து பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் முன்னாள் மாணவர்கள் 1984 வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்ட வளர்ச்சி கல்வி அலுவலர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். முன்னாள் ஆசிரியர்கள், இந்நாள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளையும் முன்னாள் மாணவர்கள் 1984 வழங்கினர். இந்த விழாவில் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல் சத்யபிரகாஷ், நிஷா கௌதமன் கலந்து கொண்டனர். மற்றும் இந்த விழாவில் 1982 ஆம் ஆண்டு, 1987 ஆம் ஆண்டு, 1994 ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க செய்தனர்.
மதியம் விருந்து நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் குழுக்கள் டேவிட், முருகேசன், ராஜாராம், ஹரிஹரன், பாண்டி, தேவி ஆகியோர்மிக சிறப்பாக செய்து இருந்தனர்.




