கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10_ நாட்களே எஞ்சியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு பகுதியில் ஒவ்வொரு வீடு, வீடாக என்பதுடன், காலை, மாலை ரோடுஷோ, பொதுக்கூட்டம் என சூராவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரியங்கா காந்தி மீன்கட என்ற இடத்தில் உச்சி வெயில் கொளுத்தும் மதியம் 12_ மணிக்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண், பெண், இளைஞர்கள், இளம் பெண்கள் திரண்டிருந்த கூட்டத்தில் அவரது ஆங்கிலம் பேச்சு தெளிந்த நீரோடை போல் வெளிப்பட்டது.
எனது அண்ணன் இந்த தொகுதியில் உங்களால் கை சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, வயநாடு தொகுதியில் வாழ்கிற ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினர் என உங்களால் நேசிக்க படுகிறார்.

இரண்டு தொகுதிகளில் போட்டி இட்டு இரண்டு தொகுதியிலும் அன்பான வாக்களார்களால் தேர்வு செய்யப்பட்ட எனது சகோதரர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால். அந்த இடத்தில் அவரது தங்கையான நான் உங்கள் ஆதரவை வேண்டி போட்டியிடுகிறேன். என் அண்ணன் மீது நீங்கள் காட்டிய அதே அன்பை சற்றும் குறையாது என் மீதும் கொண்டிக்கிறீர்கள் என்பதை. உச்சி வெயிலில் ஆயிரக்கணக்கில் இங்கு கூடி உங்களது அன்பை என் மீது காட்டுகிறீர்கள் என்பதற்கு இந்த மக்கள் திரள் கூட்டமே சாட்சி.
வயநாடு தொகுதியில் கடந்த ஒரு வாரமாக நான் சந்தித்த வாக்காளர் என் மீது காட்டி வரும் அன்பு அற்புதமானது.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் என்னை சந்தித்தார்,எனது வெற்றிக்கு வாழ்த்துகளை சொன்னவர். முதிர்ந்த வயதுடைய அவரது தாய் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் தான் அவரது இயக்கம். அந்த தாய் என்னை பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக சொல்லி அவரது வீட்டிற்கு வரும் படி அழைத்தார்.
ராணுவத்தில் பணியாற்றிய அவரது அழைப்பை மதித்து அவரது இல்லம் சென்றேன்.
வீட்டிற்குள் நான் பேவதற்கு முன்பாகவே,என்னை பார்த்த அந்த தாய் சக்கர நாற்காலியில் வேக, வேகமாக வந்து என்னை கட்டி தழுவி உச்சி முகர்ந்தார். என் தாய் என்னை எத்தகைய வாஞ்சையுடன் அணைத்து முத்தம் வருவாரோ,அதே அன்பை இந்த தாயின் அணைப்பு என்னுள் ஏற்பட்டது.

அந்த தாய் அவரது வீட்டிற்குள் என்னை அழைத்து சென்று அவரது குடும்ப உறுப்பினர்களை எனக்கு அறிமுகம் படுத்தியதோடு. அவரது குடும்பத்தினர் வாக்குகள் எல்லாம் கை சின்னத்திற்கு தான் என்று தெரிவித்தவரின் அடுத்த செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது என்னை சுற்றி அமர்ந்த அனைவரும் கையில் “ஜெபமாலை”மை வைத்துக்கொண்டு எனது வெற்றிக்கு பிரார்த்தனை செய்ததோடு, அந்த மூதாட்டி எனது தாயின் நலம் பற்றி விசாரித்ததோடு, அவரது கையில் இருந்த ஜெபமாலை யை என்னிடம் தந்து என் அன்னையிடம் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.
அந்த மூதாட்டி காட்டிய இனம் புரியாத அந்த அன்பு எனக்கு ஒரு பழைய நிகழ்வை நினைவூட்டியது.
என் தந்தை மறைந்த சில நாட்களில்,எங்களது டெல்லி இல்லத்திற்கு மதர் தெரேசா வந்தார்கள். நான் மனச்சோர்வில்,உடல் நலம் இல்லாததால் எனது அறையில் இருந்தேன்.

எனது தாயை பார்த்து ஆறுதல் தெரிவித்த மதர் தெரேசா என்னை பார்க்க எனது அறைக்குள் வந்து எனக்காக பிரார்த்தனை செய்தவர் என் தலை மாட்டில் ஒரு ஜெபமாலையை வைத்துவிட்டு, மீண்டும் என் தலை மீது கையை வைத்து பிரார்த்தனை செய்தவர். மும்பையில் உள்ள அவரது சிறுவர் பள்ளியில் போய் தங்கியிருந்து பணியாற்ற அழைத்தார்.
மதர் தெரேசாவின் அழைப்பை ஏற்று பல மாதங்கள் அங்கு தங்கி. சிறுவர், சிறுமியர்களுக்கு. இந்தி, ஆங்கிலம் பாடம் நடத்தினேன். ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் சமையல் செய்து உணவு அளித்து வந்தேன். அந்த பகுதிகளை சுத்தம் செய்வதும் எனது பணியே. ஞாயிறு மாலை தேவாலையம், பூங்கா என சிறுவர்களை அழைத்து செல்வது என்ற பணியால் நான் மன அமைதி அடைந்து சகஜமான நிலைக்கு நான் வந்தேன்.

தேர்தல் வாக்கு சேகரிப்பில் நேற்று சில மாணவிகள் வயநாட்டில் ஒரு மருத்துவ கல்லூரி வேண்டும் என கேட்டதுடன். அந்த இளம் மாணவிகள் என்னிடம் சொன்னது. இங்குள்ள தலைமை மருத்துவ மனைக்கு ராகுல் காந்தி ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சை தேவையான கருவிகளை வாங்கி கொடுத்துள்ளதை எனக்கு தெரிவித்தனர்.

வயநாடு இயற்கை வளம் நிறைந்த மலை முகடுகளை கொண்ட ஒரு அழகான பகுதி. இங்குள்ள விவசாயங்கள் எவை,எவை என்பதை நான் அறிவேன். விவசாயிகளின் அத்தியாவசிய தேவைகளை நான் அறிவேன்.
அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு விபத்தில் 250_க்கு மேலோரது மரணம். இதனால் பெற்றோரை,உறவுகளை இழந்த சிறுவர்,சிறுமிகளை முகாமில் போய் பார்த்தேன்.
வயநாட்டில் ஏற்பட்ட பேர் அழிவுக்கு மத்திய மோடி அரசு எவ்விதமான உதவியும் செய்யாது பாராமுகமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல் குறித்து குற்றம் சாட்டினார்.

வயநாடு இடைத்தேர்தலில் மூன்று தேசிய கட்சிகள் களத்தில் நின்றாலும் தொகுதி முழுவதும் பிரியங்கா காந்தியை ஆதரித்து மக்களே வீதிக்கு வந்து. காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பிரியங்கா காந்திக்கான அவர்களது ஆதரவை பொது வெளியில் வெளிப்படுத்துவதை காண முடிகிறது.
இந்தியாவின் எதிர் கட்சி தலைவர் வயநாட்டில் மனந்தவடி புனித மேரி மாதா கல்லூரி வளாகத்தில் பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தி இன்று (நவம்பர்_3) வரவிருக்கும் நிலையில் ராகுல் காந்தியை வரவேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உட்பட தமிழகம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளார்கள்.