கொல்கத்தா பாலியல் சம்பவத்தை தொடர்ந்து பல்லடத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு, 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா மருத்துவர் பயிற்சியாளர் பெண் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும், 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அரசு தாலுக்கா மருத்துவமனை வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெளி நோயாளிகளை அனுமதிப்பதில்லை.