கோவையில் உள்ள தனியார் ஜெம் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்தியா – இஸ்ரோ விஞ்ஞானி சிவதானப்பில்லை செய்தியாளர்களிடம் கூறியதாவது

பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்போது ‘சூப்பர் பிரம்மோஸ்’ ஏவுகணையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.
தற்போது ஒலியின் வேகத்தைப் போல 3 மடங்கு வேகத்தில் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகளை, 7 மடங்கு வேகமாக அதாவது ஹைப்பர்சோனிக் நிலைக்கு கொண்டு செல்வதே தற்போதைய முதன்மை இலக்கு என்றும் எனவும்
இத்தகைய வேகம் அதிகரிக்கும் போது ஏவுகணையின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிப்பதோடு, எதிரி நாட்டு ரேடார்களால் இதைக் கண்டறிய முடியாது என்றும், இது எந்தவொரு தற்காப்பு அமைப்பையும் ஊடுருவி அழிக்கும் வல்லமை கொண்டது என்றும்

இந்தியா ஏற்கனவே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை 1,000 வினாடிகள் வரை சோதித்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதாக தெரிவித்தவர்
தொடர்ந்து இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி குறித்துப் பேசிய அவர், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
சிந்துரா நடவடிக்கையில் இந்த ஏவுகணைகள் காட்டிய அதீத செயல்திறன் காரணமாக, பல நாடுகள் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி நாம் ஏற்றுமதி செய்யும் ஏவுகணைகளை விட அதிநவீனமான ஏவுகணைகளே இந்தியப் படையில் பயன்படுத்தப்படும் என்றும்

ராணுவத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஏஎம்சிஏ போன்ற உள்நாட்டு போர் விமானத் தயாரிப்புகள் வேகமெடுத்துள்ளன. பொருளாதார ரீதியாக இந்தியா தற்போது உலகின் 4-வது பெரிய நாடாக இருப்பதாகவும், விரைவில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து விண்வெளி ஆய்வு குறித்துப் பேசுகையில்
ககன்யான் திட்டத்தின் கீழ் முதலில் பெண் ரோபோ அனுப்பப்பட்டு சோதனை செய்யப்படும் என்றும், அதன்பின் 4 விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும்

அக்னிகுல், ஸ்கைரூட் போன்ற 400-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுவது விண்வெளித் துறையை மேலும் வலுப்படுத்தும் என்று கூறிய அவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்து அவரது கனவுப்படியே இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருவதாகக் இவ்வாறு தெரிவித்தார்.










