• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா..,

ByS.Navinsanjai

Apr 28, 2025

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முன்னாள் காவல் இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில் ஜம்மு-காஷ்மீர் பல்ஹாம் பகுதியில் சிறுவர்கள் நடித்த தாக்குதலில் பல்வேறு பகுதியிலிருந்து சென்ற சுற்று பயணிகள் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எப்படி நடந்தது ஏன் இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு இல்லை என புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது போன்ற தீவிரவாதிகள் தாக்குதல் நடை பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நான் காவல்துறை தலைமை பொறுப்பில் இருக்கும் போது மாண்புமிகு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி நேரடியாக ஜம்மு காஷ்மீர் மும்பை தெலுங்கானா ஹைதராபாத் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாட்டில் தீவிரவாதி தடுப்பு பிரிவை ஏற்படுத்தி உள்ளோம். அதில் சென்னை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் எஸ்பி ரேங்க் உள்ளவர்கள் வழிநடத்துவார்கள் அதில் நுண்ணறிவு பிரிவு விசாரணை பிரிவு அதிரடி பிரிவு அனைத்தையும் ஒருங்கிணைத்து தீவிரவாத தடுப்பு பிரிவில் காணப்படும். அல்கொய்தா போன்ற வெளிநாட்டில் உள்ள தீவிரவாத பிரிவுதான் இங்குள்ள இளைஞர்களை மூளை சலவை செய்து அவர்கள் மூலமாக தான் தாக்குதல் நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் வெளிநாட்டில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இங்கு உள்ள இளைஞர்களை மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களை கண்காணித்து அவர்களை கைது செய்வது அல்லது அவர்களை நல்வழிப்படுத்தும் அமைப்பு இப்போது தமிழ்நாட்டில் உள்ளது. எனவே தமிழ்நாடு தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி செய்தால் முறியடிக்க தமிழ்நாடு போலீஸ் முன் எச்சரிக்கையாகவே உள்ளது. தயவு செய்து மத உணர்வு உள்ள இளைஞர்கள் வெளிநாட்டுகளில் தீவிரவாதிகள் இயக்கும் இணையதளம், சமூக ஊடகங்களில் பரப்பும் செய்திகளை கேட்காதீர்கள் என கூறினார்.

இது போன்ற தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேர்ந்திருந்தால் காவல்துறை அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கும் உடனடியாக சுட்டுவிடும் இதனால் உங்கள் குடும்பத்திற்கு பெரிய இழப்பு ஏற்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரை தொடர்பு கொள்ள அருகில் உள்ள காவல் நிலையம் சென்று தொடர்பு கொள்ளலாம் அல்லது இணையதள மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

வாட்ஸ் அப் மூலமாக மத அளவில் கலவரத்தை தூண்டும் விதமாக மக்கள் மத்தியில் கொந்தளிப்போம் சண்டையும் ஏற்படுத்தும் விதமாக தகவல்கள் பரப்பினால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களை கைது செய்யப்படும். மத அடிப்படையில் ஜாதி அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கு இடையே மோதலை உருவாக்கும் எந்த செய்திகளையும் தயவு செய்து இளைஞர்கள் பகிர வேண்டாம் என அறிவுறுத்தினார்.