விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரம் மற்றும் சத்திரம், குகன் பாறை, துலுக்கன்குறிச்சி பகுதியில் தனியார் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கேபிள் வயர்கள் முறையாக பதிக்கப்படாமல் வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக பதிக்கப்பட்டு வருகிறது .
இதனால் இரவு நேரங்களில் கேபிள் வயர்கள் தடுமாறி காயமடைகின்றனர்.ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேபிள் வயர்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.