• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கைதி ஹிந்தி ரீமேக் அப்டேட்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள் குறித்து இந்த படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ஹிந்தி ரீமேக்கை தர்மேந்திர சர்மா அவர்கள் இயக்குகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்திற்கான ஹிந்தி சூட்டிங் ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. போலோ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.