இந்தி, தெலுங்கு படங்களின் மூலம் சினிமாவில் கலக்கிவந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2008ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து ராஜமவுலி இயக்கிய மாவீரா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமானார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகவர்வாலுக்கு நேற்று (ஏப்ரல் 19) ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாளே குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர். நடிகை காஜல் அகவர்வால் கணவர் கௌதம் கிச்சுலு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைக்கு ‘நீல் கிச்சுலு’ எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது பதிவில் ‘எங்கள் மகனான நீல் கிச்சுலுவின் பிறந்துள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
