மதுரை மாவட்டம் பரவையில் உள்ள மங்கையர்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்துறை தர உறுதிசெய்தல் குழு (IQAC) மற்றும் வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை இணைந்து “திறன், வேலை, சாதனை: பிரதமர் விஸ்வகர்மா திட்டம் (PM VBRY) விழிப்புணர்வு நிகழ்ச்சி” என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

IQAC ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஜெஸ்டினா ஜெயகுமாரி வரவேற்பு உரையாற்றினார். கல்லூரி தலைவர் முனைவர் பி.அசோக் குமார் அவர்கள் கலந்து கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி குறித்து சிறப்புரையாற்றினார். மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.கார்த்திகேயன் மற்றும் கல்லூரி கல்விப்புலத் தலைவர் முதல்வர் திருமதி. க.செந்தூர் பிரியதர்ஷினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பொறியாளர் சக்தி பிரனேஷ், சார்பு தலைவர் மருத்துவர் அ. சரவணபிரதீப் குமார் இணைத் தலைவர் மருத்துவர் திவ்யா மீனு ப்ரீதா,கல்லூரி முதல்வர் முனைவர் உமா பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக மதுரையில் உள்ள ஊழியர் நிதி அமைப்பின் (EPFO) பிராந்திய ஆணையர் அழகிய மணவாளன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தமது உரையில், சேமிப்பும் முதலீடும் நமக்கு நிதி பாதுகாப்பு, சுயநிறைவு மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைக் கொடுக்கும் முக்கிய கருவிகள் எனவும், இளைஞர்கள் திறன் வளர்ச்சியையும் அரசு வழங்கும் வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களையும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் எஸ். மனோஹரன் மற்றும் மு. அண்ணாதுரை ஆகியோர் (ஊழியர் நிதி அமைப்பின் அமலாக்க அலுவலர்கள்) தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, ஊழியர் நிதி திட்டங்கள், நிதி பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு குறித்து விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் மற்றும் வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறையின் மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, விருந்தினர்களுடன் கருத்தாடலில் ஈடுபட்டனர். இதன் மூலம் அவர்கள் PM VBRY திட்டம் குறித்து விரிவான புரிதலைப் பெற்றனர். நிகழ்ச்சியை திருமதி தேவி மீனாட்சி, ஆங்கில துறை உதவி பேராசிரியர் மற்றும் IQAC உறுப்பினர் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி நிறைவில் வணிகவியல் துறை இணை பேராசிரியர் அனுசுயா நன்றியுரை வழங்கினார்.