• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காமராஜர்வீட்டு சென்டிமெண்டை கண்டு பயப்படும் பிரதமர் மோடி

வரும் ஜனவரி 12 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க வருகை தர இருக்கிறார். பிரதமரின் நிகழ்ச்சிக்காக தமிழக அரசு சில இடங்களை தேர்ந்தெடுத்து ஒன்றிய அரசுக்கு அனுப்பிய நிலையில், பிரதமரின் நிகழ்ச்சியை விருதுநகரில் வைத்துக்கொள்ள விரும்புவதாக தகவல்கள் வெளிவந்தனஅதற்கு காரணம்
விருதுநகர் நேரு குடும்பத்துக்கு மாற்றாக காங்கிரஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த மண்.

மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் அடர்த்தியாக இருக்கும் மாவட்டம்.இந்தப் பின்னணியோடு விருதுநகரை செலக்ட் செய்த நரேந்திர மோடி அந்த விழாவுக்காக விருதுநகர் வரும்போது அங்கே காமராஜரின் நினைவு இல்லத்துக்கும் சென்றுவருவாரா என்ற கேள்வி தமிழக பாஜகவினர் மத்தியிலும், விருதுநகர் அரசியல் வட்டாரங்களிலும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.

பிரதமர் விருதுநகர் வரும்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க காமராஜரின் இல்லத்துக்கு சென்று வர வேண்டும் என்று தமிழக பாஜகவில் இருந்து சிலர் தலைமைக்கு வற்புறுத்தியிருக்கின்றனர். அதேநேரம், ‘பிரதமர் விருதுநகர் வரட்டும். அங்கே விழாவில் காமராஜரை பற்றி வாய் நிறைய புகழாரம் சூட்டட்டும். ஆனால் விருதுநகரில் இருக்கும் காமராஜரின் இல்லத்துக்கு மட்டும் சென்றுவிட வேண்டாம்” என்று தமிழக பாஜகவிலேயே சிலர் மேலிடப் பொறுப்பாளர்கள் மூலமாக தகவல் அனுப்பியுள்ளனர். இதற்குக் காரணமாக அவர்கள், “தஞ்சை பெரிய கோயிலுக்கு எப்படி அரசியல்வாதிகள் செல்வதை சென்டிமென்ட்டாக ஏற்பதில்லையோ அதேபோலத்தான் விருதுநகர் காமராஜர் இல்லத்துக்கும் ஒரு நெகட்டிவ் சென்டிமென்ட் இருக்கிறது” என்று குறிப்பிட்டு அனுப்பியுள்ளனர்.வற்றாத புகழைக் கொண்ட வலிமையான பெருந்தலைவர் காமராஜருடைய பிறந்த இல்லத்துக்கு போவதில்

சென்டிமென்ட் இருக்கிறதா என்று விசாரித்த போதுநாங்களே சொல்லக் கூடாது. இருந்தாலும் அப்படித்தான் அரசியல் வட்டாரத்தில் ஒரு எண்ணம் இருக்கிறது. அதாவது காமராஜர் முதல்வராக இருந்தபோதிலும் தனது அதிகாரத்தின் ஒரு துளியைக் கூட தன் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. தன் தாயாரை அவர் கடைசி வரை செல்வச் செழிப்பில் வைத்திருக்கவில்லை. எளிய வாழ்க்கை நடத்தவே அனுமதித்தார். அந்த வகையில் விருதுநகரில் இருக்கும் காமராஜரின் வீட்டுக்குச் செல்பவர்களுக்கு எளிய வாழ்க்கை நிரந்தரமாகிவிடும் என்ற ஒரு சென்டிமென்ட் காங்கிரஸ் காரர்களிடமே உண்டு.

ராஜீவ் காந்தி சுற்றுப் பயணம் வந்தபோது மூப்பனாரும், அருணாசலமும் அவரை காமராஜர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின் ராஜீவ் காந்தி அதிகாரத்துக்கே வரவில்லை. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டதும் காமராஜர் இல்லத்துக்கு செல்வதற்காக விருதுநகர் வந்தார் .அப்போது இந்த சென்டிமென் ட்டை எடுத்துச் சொன்னால் கோபித்துக் கொள்வார் என்பதால்… காமராஜரின் இல்லத்துக்கு சென்றுவிட்டு அப்படியே அருகே இருக்கும் காமராஜர் மண்டபத்துக்கு சென்று மாலையிட்டு வாருங்கள் என்று லோக்கல் காங்கிரஸார் வற்புறுத்தி அப்படியே அவரை செய்ய வைத்தனர்.


தமாகாவை தொடங்கும்போது மூப்பனார் விருதுநகர் காமராஜர் இல்லத்துக்குதான் வந்தார். தமாகாவின் முதல் தேர்தலில் மூப்பனார் ஜெயித்தாலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் கூட தமாகா கட்சியைநடத்த முடியவில்லை. அதன் பிறகு இன்றுவரை தமாகா என்பது பெரிய அதிகாரத்துக்கு வரக் கூடிய இயக்கமாக இல்லை. இப்படிப்பட்ட சென்டிமென்ட் காங்கிரஸுக்குள்ளும் காங்கிரஸ் அல்லாத விருதுநகர் அரசியலிலும் இருக்கிறது. அதனால் பாஜகவினர் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது” என்கிறார்கள்.


மெயின் பஜாருக்கும் நகராட்சிக்கும் நடுவே தெப்பம் அருகே இருக்கும் காமராஜரின் நினைவு இல்லம் என்பது மிகக் குறுகலான சாலையில் இருக்கிறது. அதனால் பிரதமரின் பாதுகாப்புப் படையினர் பிரதமர் அங்கே செல்ல அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது என்கிறார்கள் விருதுநகர் பாஜகவினர்.