• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றடைந்தார் பிரதமர் மோடி

Byகுமார்

Sep 25, 2021

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு விடுத்த அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 குவாட் கூட்டமைப்பு நாடுகள், இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குவாட் கூட்டமைப்பை சாதகமான வழியில் பயன்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு உச்சி மாநாடு நிறைவு பெற்றது.

இந்நிலையில், நியூயார்க்கில் நாளை நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76-வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி நியூயார்க் சென்றடைந்தார்.