டெல்லியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி என்சிஆரின் சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் பூமியின் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் இன்று அதிகாலை 5:36 மணிக்கு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே சாலைக்கு ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் டெல்லி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் வெளியிட்டுள்ளார். அதில், டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)