• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் தன் மகன் விஜய பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவிப்பு.

ByJeisriRam

Apr 13, 2024

யாரிடம் இரட்டை இலை இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அதிமுக.
உங்கள் மகனுக்காக ஏன் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை என பத்திரிகையாளர் கேட்டதாகவும் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அனைவரும் தன் பிள்ளைகளே.
நாளை முதல் தன் மகன் விஜய பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் V.T.நாராயணசாமியை ஆதரித்து அதிமுக கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

இந்த பரப்புரையின் போது பெரியகுளம் பகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகளான மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, திண்டுக்கல் சபரிமலை அகல ரயில் பாதை திட்டம், பெரியகுளம் நகரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பேரிச்சம் ஏரியிலிருந்து நீர் அதிகம் எடுப்பதற்கான திட்டம், பெரியகுளம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராதது குறித்த பிரச்சனை உள்ளிட்டவைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என வாக்குறுதிகளாக கொடுத்து அதிமுக வேட்பாளர் V.T. நாராயணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.

மேலும் பரப்புரையின் போது அதிமுகவில் இருந்து பலர் பிரிந்து சென்றாலும் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அதிமுகவினர் எனக் கூறியும், அதிமுக கூட்டணியில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனுக்கு நீங்கள் வாக்கு சேகரிப்பில் ஏன் இன்னும் ஈடுபடவில்லை என பத்திரிக்கையாளர்கள் கேட்டதாகவும், அதற்குப் பரப்புரையின் போது 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் தேமுதிக, மற்றும் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைவரும் தன் பிள்ளைகளே எனக் கூறியதோடு, தேனி மக்களவைத் தொகுதி பரப்புரையை முடித்துக் கொண்டு நாளை முதல் தன்மகன் பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்,

மேலும் பிரச்சாரக் கூட்டத்திலிருந்து விஜயகாந்தின் பெயரை குறிப்பிட்டு பேசுங்கள் என கூடியிருந்த தொண்டர்கள் கூறியதற்கு, இது தேர்தல் நேரம் இரட்டை இலைக்காக வாக்கு சேகரிக்க வந்துள்ளேன், அதனால் தான் விஜயகாந்த் பற்றி ஆரம்பத்தில் பேசவில்லை, எனக் கூறியதோடு உங்கள் உள்ளத்தில் விஜயகாந்த் எப்படியோ அதே போல் தான் என் இல்லத்திலும் ரத்தம் நாடி நரம்பு அணு என அனைத்திலும் இருக்கிறார் எனக்கூறி அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என பரப்புரை மேற்கொண்டார்.