• Sun. May 5th, 2024

மீண்டும் பலிக்கும் பாபாவங்காவின் கணிப்பு : அச்சத்தில் மக்கள்

Byவிஷா

Apr 24, 2024

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் பல கணிப்புகள் அப்படியே அரங்கேறி உள்ள நிலையில், இந்த ஆண்டு மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்றும் அவர் கணித்திருப்பது பலித்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.
பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வங்கா சுமார் 5000 ஆண்டுகள் வரை நடக்கப்போகும் பல்வேறு சம்பவங்களை துல்லியமாக கணித்துள்ளார். பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் பல கணிப்புகள் குறிப்பிட்டிருப்பதுப்படியே அப்படி அரங்கேறியுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், பிரிக்ஸிட், 2004 சுனாமி பேரலைகள், கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஆகியவை நடந்துள்ளன. 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் பல்வேறு கணிப்புகள் பலித்து வருகின்றன.
அதன்படி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்துள்ளது. மேலும் அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புற்று நோய்க்கான தடுப்பு மருந்தை நெருங்கி விட்டதாக சமீபத்தில் அறிவித்தார்.
உலகம் முழுவதும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என்றும் கூறியிருந்தார். அதற்கு ஏற்ப பருவ நிலை மாற்றத்தால் பெரும்பாலான நாடுகள் ஒரு பக்கம் கடுமையான மழையையும் மறுபக்கம் வரலாறு காணாத மழையையும் பெற்று வருகிறது. சமீபத்தில் பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்து உலக நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை மணி அடித்தது.
இப்படி பாபா வங்காவின் பல கணிப்புகள் நடந்தேறி வரும் நிலையில், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதலும் பாபா வங்காவின் கணிப்பை நினைவுப்படுத்தியுள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்றும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது கடுமையான தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்றும் கணித்துள்ளார். மீண்டும் இஸ்ரேல் தங்களை தொட்டால், நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு உச்சபட்ச தாக்குதல் இருக்கும் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது ஈரான்.
ஈரானின் இந்த மிரட்டல், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்பதை மறைமுகமாக சொல்கிறதா என உலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதனிடையே இஸ்ரேலுக்கு எப்போதும் பக்க பலமாக இருப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு கூடுதல் படைகளை அனுப்பி வைக்கவும் அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாபா வங்காவின் கணிப்பின்படி மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *