• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் நடிகர் விஜயகாந்த் நலம் பெற வேண்டி..,ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

BySeenu

Dec 11, 2023

கோவை மாவட்டம் தேமுதிக மதுக்கரை ஒன்றிய தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயலாளர் டுதத ஜெகன் அறிவுறுத்தலின் படி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நலம் பெற ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோவிலில் தேமுதிக கட்சியின் சார்பில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கோவை தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய தேமுதிக சார்பில், கோவை ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுக்கரை ஒன்றிய கழக செயலாளர் போடிபாளையம் ஆறுச்சாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செயற்க்குழு உறுப்பினர் முருகானந்தம், பொதுக்குழு உறுப்பினர் விக்ரம், இளைஞர் அணி செயலாளர் தவசி தனபால்,ஒன்றிய கழக செயலாளர்கள் சரன்பிரபு, ராசு, மதுக்கரை ஒன்றிய கழக நிர்வாகிகள் தங்கராஜ்,சக்திவேல்,செந்தில்குமார், ரங்கநாதன்,குமாரபாளையம் நாகராஜ்,தர்மராஜ், எட்டிமடை நாகராஜ்,குமார் நகுலன், மதுக்கரை நகரம் வரதராஜ், அப்பாஸ், கிருஷ்ணன், கிணத்துக்கடவு ஆனந்த், குறிச்சி பகுதி கழகம் சின்னசேட், ரமனா ஜோசப், இருகூர் பேரூராட்சி செல்வராஜ் மற்றும் மகளிர் அணி அன்னபூரணி, மெர்சி உள்ளிட்ட ஏராளமான தேமுதிகாவினர் கலந்துகொண்டனர்.