• Fri. May 3rd, 2024

மதுரை ஆதீனம்-அமைச்சர் சேகர்பாபுவிற்கு பாராட்டு

ByA.Tamilselvan

May 7, 2022

பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சேகர்பாபு சுமுக தீர்வு காணப்படும் எனக் கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. ஆனால், இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான பட்டினப் பிரவேச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது தருமபுரம் ஆதீனம். இந்த நிலையில், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்திருக்கிறார்.
இதுதொட்ர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மே 22ஆம் தேதிதான் பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக நல்ல முடிவாக மகிழ்ச்சியான முடிவை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பார் என்று கூறினார்
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், பாலபள்ளம் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்சியில் மதுரை ஆதீனம் கலந்துகொண்டார் .அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மகா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் போது, தமிழகத்தில் விடுமுறை அளிக்கபடாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும்.தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. பிரதமரை சந்திக்க கூடிய நேரம் வரும்போது சந்திப்பேன்.
மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாக சொல்கிறீர்கள். நாஞ்சில் சம்பத் யாருக்கு சாமரம் வீசுகிறார். முதலில் அவர் எந்த கட்சியில் இருந்தார், அடுத்து எங்கே போனார், இப்போது எங்கு இருக்கிறார். நான் இறைவனுக்கு மட்டுமே சாமரம் வீசுவேன். தருமபுரம் ஆதீனத்தை தூக்கிச் செல்வதை தடைசெய்தார்கள். போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கிச் செல்வது, இஸ்லாமியர்கள் அவர்களது சமயம் சார்ந்த சடங்குகளுக்கு பல்லக்கு தூக்குவது இதை பற்றி எல்லாம் அவர் பேசுவாரா.
மற்றொறு கேள்விக்கு பதில் அளித்த ஆதினம்…அரசியல்வாதி என்னவேண்டுமானாலும். பேசலாம் ஆன்மீகவாதி பேசக்கூடாதா என்று கேட்ட மதுரை ஆதீனம், பட்டினப் பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருப்பதால்தான், ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் நான் உட்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது. பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமுக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஆன்மிகத்தில் பிரச்னை என்றால் நான் தொடர்ந்து குரல்கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *