மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை நெய் திரவியம் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தனர் அப்போது பக்தர்கள் “ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா”என மனமுருக வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை எம் .வி. எம் குழும சேர்மன் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளர் எம் .மருது பாண்டியன் ,நிர்வாகி எம்.வள்ளிமயில் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
சாமி தரிசனம் செய்தனர். இதேபோல திருவேடகம் ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாதர் கோவில் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் சோழவந்தான் பகுதி சிவாலயங்களிலும் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.