• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சிவாலயங்களில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

ByKalamegam Viswanathan

Jul 31, 2023

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.வி.எம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், தக்கார் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். பூஜைகள் நடந்தது. இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவளவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதி உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.