JCI தன்னார்வ அமைப்பின் பிரதீபா புரஸ்கார் விருதை பெற்ற சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் பெற்றனர்.
ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான ஆளுமைத்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு திறன்வளர் பயிற்சிகளை ஜேசிஐ தன்னார்வ அமைப்பானது நாடுமுழுவதும் நடத்திவருகின்றது. ஒவ்வொரு வருடமும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் திறமை, கல்விச் செயல்பாடுகள், நன்னடத்தை மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரதீபா புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் JCI, VIII Zone சார்பாக 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர்களுக்கான பிரதீபா புரஸ்கார் விருது, சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஹரிசுதன் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவி திவ்யநாயகி ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த விருதினை சிவகங்கை அமைப்பின் JCI தலைவர் பன்னீர் செல்வம், செயலாளர் ஹரிஹர சுதன் மற்றும் பயிற்சியாளர் சத்தியப்ரியா ஆகியோர் இவ்விருதினை மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தனர்.
இந்த விருது பற்றி JCI அமைப்பின் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பன்னீர் செல்வம் கூறுகையில்: நமது சிவகங்கை மாவட்டத்தில் JCI எனும் தன்னார்வ அமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. வளரிளம் சமுதாயத்தை நல்வழிப் படுத்துவது இதன் தலையாய நோக்கம் ஆகும். பள்ளி மாணவர்கள் வருங்கால சமுதாயத்தை சிறந்த முறையில் வடிவமைப்பவர்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். இந்தவருடம் இந்த விருதுக்கு சிவகங்கையில் செயல்பட்டு வரும் சமூக நல்லிணக்கத்துடன் கல்வி போதிக்கும் தமிழகத்தில் முதல் புத்தகமில்லா சிபிஎஸ்இ பள்ளி எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்ற மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து அங்கு பயிலும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைகள், அனைத்து போட்டிகளிலும் கலந்து கொள்ளும் மனப்பக்குவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதினை இப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதில் JCI பெருமிதம் அடைகிறது என்றார்.

பள்ளியின் இறைவழிபாட்டுக் கூட்டத்தில், விருதுபெற்ற மாணவச்செல்வங்களுக்கு பள்ளியின் முதல்வர்.திரு.பாலமுருகன், மாணவர் தலைவர்.காவியன், தலைவி.தான்யா ஶ்ரீ மற்றும் JCI அமைப்பின் நிர்வாகிகள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
பள்ளித் தலைவர் டாக்டர்.பால. கார்த்திகேயன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ஆகியோர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.








