• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிரபாஸின்அடுத்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Byமதி

Sep 28, 2021

பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் பிரபாஸ். தற்போது இவர் ‘ஆதிபுருஷ்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தின் ஒருபகுதியை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.

ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடிக்கின்றனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சச்சேத் பரம்பரா இசையமைக்கிறார்.