• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தள்ளிப்போகிறதா ‘ஆர்ஆர்ஆர்’ வெளியீடு?

ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இந்தப் படம் ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சென்னையில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்ட படக்குழுவினரை வாழ்த்தி பேசியது குறிப்பிடத்தக்கது.