வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
உயர்நீதிமன்ற உத்திரவின்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு வார்டு வரையறை செய்யப்பட்டு உள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளை ஒதுக்கும் பணியும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பல்வேறு கட்சியினரும் அந்தந்த கட்சியில் விருப்ப மனுவை வழங்கிவருகின்றனர்.
இந்தன் நிலையில், உள்ளாட்சி தேர்தல் தல்லிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் அல்லது மே மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் ஒரு மாதகாலமாக பெய்து வரும் கனமழை காரணமாகவும், புதிதாக பரவ தொடங்கி இருக்கும் ஓமிக்கிரான் வைரஸ் தொற்று போன்றவற்றை கருத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.




