• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

எடப்பாடிக்கு எதிராக சேலம்,திண்டுக்கல் மாவட்டங்களில் போஸ்டர்

ByA.Tamilselvan

Mar 10, 2023

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சேலம் , திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சுவரொட்டி ஒட்டி வருவது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்தையடுத்து தொடர்ந்து தோல்விகளை அதிமுகவுக்கு பெற்று தரும் எடப்பாடி பழனிச்சாமி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலத்தில் பல்வேறு இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரெட்டிகளை ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்! அ.தி.மு.க. தோல்வியடைய காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு. சமத்துவ பேரியக்கத்தை சமுதாய கட்சியாக மாற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு வெளியேறு என்ற வகையில் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. இவண் நிலக்கோட்டை அ.தி.மு.க. தெற்கு ஒன்றியம் என்று எழுதப்பட்டுள்ளது. சேலம்,திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.