மதுரையில், தொழில்நுட்ப கல்விக்கு என, இணை இயக்குநரை அரசு நியமிக்க வேண்டும், பயிற்று மையங்களுக்கு இடைவெளி வேண்டும், மாணவர்களிடம் அபராதம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
தட்டச்சு தேர்வுக்கு அடிப்படை கல்வி ஆறாம் வகுப்பை வைக்க வேண்டும், 2025 தட்டச்சு தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரவேண்டும், நிரந்தரமான தேர்வு மையங்களை அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி, மதுரையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு, தட்டச்சு ஆசிரியர் நிர்வாகிகள் எல். மனோகரன் தலைமை வகித்தார். சோமசேகர், பாஸ்கரன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இணை இயக்குநர் பணியிடம் – தட்டச்சு பயிற்சி மைய ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை
