சென்னை கூத்துப்பட்டறை மற்றும் பைந்தமிழ் வலையொளி இணைந்து ஆசிரியர் தினவிழாவை மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்தினர்.விழாவிற்குப் பேராசிரியர் வீ.மோகன் தலைமை வகிக்க, பேராசிரியர் காந்திதுரை முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் மு.மகேந்திர பாபு வரவேற்றார்.

மகேந்திர பாபு எழுதிய ‘பூந்தோட்டம்’ சிறுவர்க்கான பாடல் நூலினைப் பெரும்புலவர் சன்னாசி வெளியிட முதல் நூலினை ‘ஆற்றல் ஆசிரியர்’ வேம்பார் கிறிஸ்துஞான வள்ளுவன் பெற்றார். நூல் குறித்து கவிஞர் மணி மீனாட்சி சுந்தரம் மதிப்புரை வழங்கினார். சிறப்பாகப் பணிபுரிந்த எட்டு ஆசிரியர்களுக்கு ‘ஆற்றல் ஆசிரியர்’ விருதினைப் பெரும்புலவர் சன்னாசி வழங்கினார். ஆசிரியர்கள் இராணிமாலா, தனலட்சுமி, பெல்சியா, ரேவதி சுந்தரி, இராமநாதன், சக்திகுமார், அருள் செபாஸ்டின், தேனி சுந்தர் ஆகியோருக்கு ‘ஆற்றல் ஆசிரியர்’ விருதும், சான்றிதழும், பூந்தோட்டம் நூலும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.
கவிஞர் மூரா, சென்னை கூத்துப்பட்டறையின் செயலாளர் லதா, சங்கர சபாபதி, முருகேசன், இரகமத்துல்லா வாழ்த்துரை வழங்கினார்கள். ‘ஏர்’ இதழை எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அறிமுகம் செய்து பேசினார். நிகழ்வினைத் தமிழாசிரியர்கள் நாகேந்திரன், சுப்ரமணி தொகுத்து வழங்கினார்கள். விழாவினை சத்தியசீலன், முருகன், மதுரை லட்சுமி, கார்த்திகேயன், முத்துராசா, சினிமதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சென்னை கூத்துப்பட்டறை நிறுவுநர் முத்துசாமி நன்றி கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)