• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிகினிக்கு விடைகொடுத்த விஜய் பட கதாநாயகி பூஜா ஹெக்டே

பிகினியில் ஓவர் அலப்பறை செய்து வந்த பூஜா ஹெக்டே தற்போது கொஞ்சம் கிளாமரை குறைக்க பூப்போட்ட புடவையில் போஸ் கொடுத்துள்ளார். தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரே படத்தில் காணாமல் போன பூஜா ஹெக்டே-வை சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தேடி கண்டு பிடித்து தமிழ் திரையுலகின் பக்கம் கொண்டுவந்துள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

ஆரம்பத்தில் தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், தன்னை தேடி வந்த பட வாய்ப்புகளை ஏற்க மறுத்த பூஜா ஹெக்டே பின்னர் விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் என்பதாலும் நடிக்க சம்மதித்தாராம்.

தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என்று அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அம்மணி காட்டில் செம்ம பட மழை என்று தான் கூறவேண்டும்.
தொடர்ந்து ஓயாமல் ஷூட்டிங்கில் பிசியாக இயங்கி கொண்டிருந்தாலும், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.

நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து உள்ளதால், இவர் என்னசெய்தாலும், அதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
ரசிகர்களை கவரும் விதமாக திரையில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியுடன் விதவிதமான உடையணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூஜா ஹெக்டே.

இவர் தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ள, ‘ராதே ஷியாம்’ மற்றும் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘ஆச்சார்யா’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.தற்போது பிகினியில் ஓவர் அலப்பறை செய்து வந்த பூஜா ஹெக்டே தற்போது கொஞ்சம் கிளாமரை குறைத்து குடும்பபாங்காக பூப்போட்ட புடவையில் போஸ் கொடுத்துள்ளார்.