• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பொன்னியின் செல்வனின் பொன்னேரி தூர்வாரப்படுமா…. களம் இறங்கிய அன்புமணி!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சோழ கங்கம் மீட்பு நடை பயண விழிப்புணர்வை தொடர்ந்து தமிழக அரசு   662.73 கோடி மதிப்பீட்டில் பொன்னேரி தூர்வாரி சரி செய்யும் பணி 2023- 24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் பாமக செய்தி தொடர்பாளர் வக்கீல்  பாலு பேசியதாவது..,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  சோழர் கால நீர் பாசன ஏரி, குளம் நீர் வழித்தடங்களை மீட்டு எடுக்கும் முயற்சியாக சோழ கங்கம் மீட்பு நடை பயண விழிப்புணர்வை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், நீர் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உட்பட அனைவரையும் சந்தித்து இத்திட்டம் குறித்து விளக்கி கூறி சோழர் கால பாசன திட்டங்களை மீட்டெடுக்க முயற்சி செய்ததன் தொடர்ந்து
பொன்னேரியில் ஒரு கோடியே  ஐம்பத்திரெண்டு லட்சத்து பதினான்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்று கனமீட்டர் மண் படிந்துள்ளதாகவும்,
இதனை தூர்வாருவது மிக முக்கியம் எனவும் ஏரியின் வரத்து வாய்க்கால் 13 கிலோமீட்டர், உபரிநீர் வடிகால் வாய்க்கால் 10 கிலோமீட்டர் வாய்க்காலை தூர்வாருதல்,ஏரியின் கரைகளை சீரமைத்தல், மிகைநீர் போக்கியின் இரும்பு பலகைகளை மாற்றி அமைத்தல் மற்றும் ஏரியினை ஆழப்படுத்துதல் போன்ற பணிகளை செய்வதன் மூலம் சுற்றுவட்டாரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மேன்மேடையும் வாய்ப்புள்ளது. 9 மாதங்களுக்கு நீர் இருப்பு இருக்க வைத்தல், பூங்கா அமைத்தல், படகு சவாரி விடுதல், மீன் பாசி குத்தகை விடுதல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு மேம்படுத்தல் என கிராம பொருளாதாரம் மேம்பாடு பெற்று வளர்ச்சி அடையும்.
பொன்னேரியில் உள்ள மண் கொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள் எடுக்கும் சுரங்கங்களை நிரப்புதல் பணியினை மேற்கொள்ள 452.23 கோடி தேவைப்படுகிறது.
சோழகங்கம் எனும் பொன்னேரி ஏரியினை சீர் படுத்தும் பணிக்கு 662.73 கோடி தேவைப்படுகிறது. இந்த பணியினை வரும் 2023 – 24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்த்து இடம்பெற செய்ய உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ளனர்.சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 13ஆம் தேதி அரியலூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் துவங்க உள்ளது.
500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த நிலையில் பட்டியலை தேடி பார்த்த போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு கடையின் பெயர் கூட இடம்பெறவில்லை.

முன்பே மூடிய கடைகளை தற்பொழுது ஒப்பிட்டு சொல்லக்கூடாது. வரும் ஆண்டில் அரியலூர் மாவட்ட ஆட்சியர்  மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடுவதற்கான பெயர் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் பெயர்கள் இடம் பெற செய்ய வேண்டும். அரியலூரில் உள்ள அமைச்சரின் கவனத்திற்கும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் சத்துணவு பணியாளர் பதவி என்பது விதவைகள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.  ஆனால் ஆதரவற்றவர்களிடமிருந்தே 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆகையால் தமிழக அரசுக்கும் இந்த மாவட்ட அமைச்சரின் பெயருக்கும் கலங்கும் ஏற்படாத வண்ணம் நியாயமாக உரியவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட வேண்டும்.கோடாலி கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடம் அமைப்பதில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலையில் 174 குடும்ப அட்டைதாரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் குடும்ப அட்டையை சமர்ப்பித்த நிலையில், உச்ச நீதிமன்றம் பொதுவான இடத்தில், பொதுமக்களுக்கு அருகில்  கட்டிடத்தை அமைக்க வேண்டும்‌ என கூறி உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் 174 குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கூறினார். உடன் அரியலூர் மாவட்ட பாமக செயலாளர் ரவிசங்கர், நகர செயலாளர் பரசுராமன் உட்பட பலர் உடன் இருந்தனர்.