சோழவந்தான் பகுதி நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தமிழ்நாடு அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வழங்கினார். திமுக பேரூர் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார். மேலரத வீதி, வளையல் கார தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுமக்கள் பொங்கல் பரிசினை மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர். நிர்வாகிகள் வார்டு செயலாளர் சுரேஷ், வேணுகோபால், கருத்தப்பாண்டி, செல்லப்பாண்டி, ஆதி. ரவி, சௌந்தரபாண்டி, சமூக ஆர்வலர் மாணிக்க மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்..!
