• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அயன் குருவித்துறை பேச்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Oct 13, 2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பேச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது 60 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டாக நடைபெறும் மண்டகப்படியானது எஸ். எஸ். எஸ். நாகூரான் பிள்ளை மனைவி என். விஜயலட்சுமி அம்மாள், என். சோலைமலை செல்வன், என்.முருகானந்தம்,
என். சிவானந்தம் குடும்பத்தாரின் ஏற்பாட்டில் சுற்றுப்புற கிராமப்பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

முதல் நாள் அம்மன் வீதி உலாவான வேடிக்கை நையாண்டி மேளத்துடன் அம்மன் மண்டகப்படி வந்து சேர்ந்தது. தொடர்ந்து இரவு கரகாட்டம் நடைபெற்றது. இரண்டாம் நாள் அம்மன் பூஞ்சோலை வந்து சேருதலும், பின்னர் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதை தொடர்ந்து அருகில் இருந்த வைகை ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு கோவில் முன்பு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது.