சென்னை, துரைப்பாக்கம், தனியார் கல்லூரியில் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜெயின் பொறியியல் கல்லூரி தாளாளர் லால்சந்த் முனோத்
செயலாளர்கள் Dr.A.. ஹரிஷ் மேத்தா மற்றும் ஜஸ்வந்த் மனோத் மற்றும் கல்லூரி முதல்வர் ஷசிகா ஆகியோர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி மாணவ மாணவிகளுடன் மண் பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
கல்லூரி மாணவர்கள் பானையில் பொங்கல் வைத்தனர் அப்போது அனைவரும் “பொங்கலோ பொங்கலோ” “பொங்கலோ பொங்கலோ” என்று மகிழ்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகளின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன கயிறு இழுத்தல் மிதிவண்டி போட்டி கோலாட்டம் உறி அடித்தல் மற்றும் ஆடல் பாடல் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது
இந்நிகழ்வில் மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தது. கிராங்களில் பொங்கல் கொண்டாடப்படுவதை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




