கிழக்கு தாம்பரம் பூண்டி பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு வினை தீர்க்கும் விநாயகர் – ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் அழகிய அலங்காரத்துடன் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபார சங்கத்தினர் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் தலைவர் முனுசாமி, உப தலைவர் கிட்டு, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் புருஷோத்தமன் மற்றும் பாலச்சந்திரன், ராதா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
பொங்கல் விழா ஆன்மீகத் திருவிழாவாகவும், சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.





