• Wed. Mar 19th, 2025

பொன்.இராதாகிருஷ்ணன் கொல்லங்கோடு பகவதி அம்மன் கோயில் முற்றத்தில் இருந்து பிரச்சாரம் தொடங்கினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் கால அவகாசம் குறைவாக உள்ள சூழலில், கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இன்று கொல்லங்கோடு பகவதியம்மனை தரிசனம் செய்து விட்டு, திறந்த வாகனத்தில் முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார்.

கோவில் முற்றத்தில் கூடி நின்ற ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் பொன்னாரின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தொரிவித்தனர்.

கோவை சட்டமன்ற பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், நாகர்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி மற்றும் ஏராளமான கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் பொன்னாரின் வாகனப் பிரச்சாரத்தில் உடன் சென்று ‘தாமரை’ சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்கள்.