கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வானதி ஸ்ரீ நிவாசன் கொல்லங்கோடு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது…,
காங்கிரஸ் இடது சாரி கட்சிகள் மீது வருமான வரி துறை நடவடிக்க விவகாரம். ஐ டி யோ , ஈடியோ எல்லாமே நாட்டில் உள்ள அமைப்புகள் தான் சட்ட ரீதியாக அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரத்தை வைத்து நடவடிக்கை எடுக்கின்றனர், தவறாக நடவடிக்கை எடுத்தலோ, உள் நோக்கம் இருந்தாலோ, பாதுகாப்பதற்கு நீதி மன்றங்கள் எல்லத்திற்கு உள்ளன.
அதனால் நீதிமன்றங்கள் தனது கடமையை நியாமகவும் சுதந்திரமாகவும் செய்யக்கூடிய இந்த நாட்டிலே எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அரசியல் ரீதியான நடவடிக்கை என்று பார்த்தால் தப்பு செய்தவர்களை தண்டிக்கவே முடியாது.
அதனால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பாக நீதியின் முன்பாக பதில் சொல்லட்டும்.
தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு விவகாரத்தில்.. ஒவ்வெரு கட்சிக்கும் சின்னம் ஒதுக்குவது ஒரு சட்ட ரீதியான நடைமுறையோடு வைத்துள்ளனர். ஒரு சின்னம் வைத்திருந்தால் அதை பதிவு செய்து அதை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் வேலை செய்ய வேண்டும், தமிழகத்தை எடுத்து கொண்டால் ஒரு சில அரசியல் கட்சியினர் தூங்கி விட்டு பாஜக மீது பாய்கின்றார்.
அந்த அந்த தொகுதிகளில் ஒரு சில சின்னங்கள் தான் கிடைக்கும் எல்ல சின்னங்களுக்கும் கிடைக்காது. தேர்தல் கமிஷன் வேண்டும் என்று எண்ணினல் நீங்கள் நீதி மன்றத்தை நாடுங்கள். பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை, தமிழக களம் பாஜவுக்கு ஆதரவாக உள்ளன. மோடி அவர்களுக்கும் ஆதரவாக உள்ளன.
தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மிக பெரிய மவுனம் மாற்றமாக மாறும். தமிழகத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பணம் இல்லாததால் தேர்தலுக்கு போட்டி இடவில்லை என்பது அவருடைய நிலைமை கட்சியிடம் தெரிவித்திருக்கிறார். இது போல நிறைய வேட்பாளர்கள் கட்சியிடம் அவர்களது கருத்து தெரிவிப்பது வழக்கம் தான்.
நிதி அமைச்சர் சொன்ன விஷயத்தை பாதியை மட்டும் தான் எடுத்து கொண்டீர்க்கள். இரண்டு மாநிலத்தில் ஏதாவது ஒரு தொகுதியை எடுத்து கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர் சொன்ன பல விஷயங்களில் கூடவே பணம் விஷயத்தையும் சொன்னார். தேர்தல் அரசியலுக்கு வரும் போது ஏற்படும் சவால்களை கட்சியிடம் வெளிப்படையா சொன்னார்கள்.
கட்சியினுடைய சாதாரண காரிய கர்த்தாக்கள் கூட போட்டியிட்டு கட்சி கடுமையாக உழைக்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள். தேர்தல் அரசியலில் இன்னும் நேரடியாக வராததால் அவங்களுக்கு இருக்க கூடிய தயக்கத்தை நேரடியாக சொன்னார்கள்.
உலகத்திலேயே பெரிய கட்சி. அதுவும் இந்த நாட்டில நிதி அமைச்சராக கடந்த ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஒரு நபர் எந்த அளவுக்கு நேர்மையாக இருந்திருப்பார் மிக்க எளிமையாக இருந்திருக்கிறார் என்பதை பார்க்க வேண்டியதை தவிர பணம் இல்லாததை அல்ல. அவர் நேர்மையாக இருந்திருக்கிறார் என்பது தான் செய்தி.
நிதி அமைச்சரின் கணவரின் கருத்து குறித்து கேட்ட போது..
நிதி அமைச்சரின் கணவர் அப்படி என்கிற வார்த்தை தவறானது. அவர் ஒரு கருத்தை சொன்னார்கள். அவர் ஒரு கட்சியில் இருந்தார்கள். ஒரு முதலமைச்சரின் ஆலோசகர் ஆக இருந்தார்கள். அவர் சொல்லக்கூடிய கருத்துக்களுக்கு பல முறை எங்களுடைய மத்திய அமைச்சர்கள் பதில் அளித்திருக்கிறார்கள்.
தேர்தல் பத்திரம் விவகாரம் பாஜக மட்டும் அல்ல பல கட்சிகள் வாங்கி இருக்கிறார். சுப்ரமணியம் சுவாமி அரசியலில் மூத்தவர். அவரை பற்றி கருத்து கூற விரும்பவில்லை எனவும் பேட்டியின் போது வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.