• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விடுதலைக் கழகம் சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு..,

ByAnandakumar

Apr 20, 2025

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற போயர் சமுதாய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் நடத்தும் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது.

இதில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம், போயநாயக்கர் இளைஞர் பேரவை, நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்பாளர்மக்கள் சேவகர் வாழவந்தியார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிறுவனத் தலைவர் தேக்கமலை தமிழகத்தில் இருக்கக்கூடிய 50 லட்சம் போயர் சமுதாய மக்கள் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்கு கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுத்து செல்வதற்கு இந்த மாநாடு தீர்மானமாக எடுத்து செல்கிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி போயர் சமுதாய மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு செய்திட வேண்டும், போயர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், தமிழகத்தில் வரும் உள்ளாட்சி, நகரப்புற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் டிஎன்டி சமுதாய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், கரூர் மாவட்டம் தோகைமலை வட்டம் கழுகூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா 200 நபர்களுக்கு மேல் வழங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் அங்கே இடம் அளித்து கல் போடாமல், சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தராமல் இருக்கும் நிர்வாகத்தை மாநாட்டு கண்டிக்கிறது.

2026 ஆம் ஆண்டு தேர்தலில் உரிமைகளை அளிக்காத இந்த ஆட்சியாளர்களை பதிலடி அடிப்பதற்காக தயாராகி உள்ளோம் எங்கள் மாநாட்டிற்கு பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்துவதாக திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்

தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற 7 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.