விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகே கச்சேரி சாலையில் போக்குவரத்து போலீஸார்கள் திடீரென்று பேரிகார்டுகளை சீரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் சிலவற்றை கொண்டு வந்து இறக்கி வைத்து அந்த பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கினர்.

இவை ஏதும் அறியாத பாதசாரிகள்,இருசக்கர வாகனத்தில் செல்வோர், மற்ற வாகனத்தில் சென்றவர்களுக்கு போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த திடீர் பரபரப்பால் அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று முதியவர் ஒருவர் மீது மோதியது. இதில் காயம் அடைந்த அவரை அங்கு இருந்த போலீசார் அதே வாகனத்தில் ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை கண்ட பொது மக்கள் எதற்கு இந்த பரபரப்பு, தேவை இல்லாத விபத்து என்றதோடு போக்குவரத்தை சரி செய்து விபத்துகளை தவிர்க்க வேண்டிய காவலர்களே விபத்தை உருவாக்கலாமா? என்றனர்













; ?>)
; ?>)
; ?>)