• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை மாவட்டம் இளமனூர் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி ஒரு வயது மற்றும் நான்கு வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் இவர் சிவகங்கையில் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பேரிடர் மேலாண்மை குழுவில் தனது பணியை முடித்துவிட்டு இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் வரும் போது எதிரே பரமக்குடியில் திருச்சி நோக்கி சென்ற அரசுப் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மோதியதில் காவலர் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை இளையாங்குடி காவல்துறையினர் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.