• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை

ByP.Thangapandi

Mar 9, 2025

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த காவலர் கண்ணன் வயது 35 இவர் மதுரை மாநகர் ஆவணியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவருக்கு திருமணம் ஆகி பவித்ரா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தையும் உள்ளது.கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தற்கொலைக்கான காரணம் குறித்து உசிலம்பட்டி மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த வாலாந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.