• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் கைது

BySeenu

Apr 9, 2025

கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போட் விசாரணைக்கு 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்
பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பபட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம்
காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் என்பவர் விசாரித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்க 1000 ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று கிருஷ்ணமூர்த்தி 1000 ரூபாய் லஞ்ச பணத்தை காவலர் ரமேசிடம் கொடுக்கும் பொழுது, காவலர் ரமேஷ்யை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ராசாயனம் தடவிய பணத்தை ரமேசிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.