• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழி தீர்க்க பதுக்கிய நாட்டு வெடிகுண்டை கைப்பற்றிய காவல் துறையினர்

ByPrabhu Sekar

Mar 28, 2025

தம்பியை கொலை செய்த நபர்களை பழி தீர்க்க அண்ணன் நாட்டு வெடிகுண்டை வாங்கி பதுக்கி வைத்திருந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆயுதம் நாட்டு வெடிகுண்டை காவல் துறையினர் கைப்பற்றினர். இரண்டு நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டை திருமலை தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பார்த்திபன் வயது 24. இவரது வீட்டில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்காக நாட்டு வெடிகுண்டு, கத்தி பதுக்கி வைத்திருப்பதாக தெற்கு குற்றப்பிரிவு தனிப்படைக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, ஆதம்பாக்கம் விரைந்த தனிப்படை போலீசார், உதவிக் கமிஷனர் முத்துராஜ் தலைமையில், மோப்ப நாய் உதவியுடன் பார்த்தீபன் வீட்டில் தீவிர சோதனை நடத்தி பெரிய கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

மோப்ப நாய் வீட்டின் பின்புறம் சென்று ஒரு இடத்தில் நின்று குரைத்தது. அந்த இடத்தில் பள்ளம் தோண்டி பார்த்தபோது, அங்கு நாட்டு வெடிகுண்டு புதைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மணல் நிரப்பிய பக்கெட்டில் நாட்டு வெடி குண்டை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். இதையடுத்து, பார்த்தீபனை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், பார்த்தீபனின் நண்பரான வினித் என்பவர் இதனை கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறியதாகவும், வினிதின் சகோதரர் தனுஷ் என்பவரை கடந்த ஆண்டு சிலர் கொலை செய்ததாகவும், அவர்களை பழி தீர்ப்பதற்காக ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டை வாங்கி பத்திரப்படுத்தியதாகவும், தெரிவித்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், அந்த நாட்டு வெடிகுண்டை பரிசோதனை செய்த வீரர்கள் கையெறி குண்டாக பயன்படுத்தும் வகையிலும், தூக்கி எறிந்தால் வெடிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து, பார்த்தீபனையும் அதே அறையில் தங்கி இருந்த ராபின்சன் என இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் படி, வினித்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.