• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை

ByA.Tamilselvan

Aug 16, 2022

கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என, ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19 மற்றும் 20-ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரினோம்.இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
கோவில் திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்.