• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வாலிபரை கத்தியால் குத்தி கொலை காவல்துறை விசாரணை !!!

BySeenu

Apr 8, 2025

கோவை, குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபருக்கு சரமாரியாக கத்திக் குத்து.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குனியமுத்தூர் போலிசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அசாருதீனை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அசாருதீன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அசாருதீன் குனியமுத்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த நிலையில், வெறொரு இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அசாருதீனின் நண்பர்களுக்கும், எதிர் தரப்பினர்க்கும் இடையே மோதல் ஏற்பட்டு வள்ளது இதைத் தொடர்ந்து கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் சி.எஸ்.ஆர் பதிவு செய்து இருதரப்பினரையும் போலீசார் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மேலும் கொடுக்கல், வாங்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவன்யூ பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இது கைகலப்பாக மாறிய நிலையில் எதிர்தரப்புனர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அசாருதீனை சரமாரியாக குத்தி உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அசாருதீனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அசாருதீன் உயிரிழந்தார். இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அடிதடி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் கத்தியால் குத்திய ஜூட் எனும் அசார்,மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன்,முகமது ரபீக் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.அதில் குனியமுத்தூர் பகுதியில் தலைமறைவாக சுற்றிக் கொண்டிருந்த அப்பாஸ்,சம்சுதீன்,முகமது ரஃபிக் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.