• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செல்போன்களை திருடி சென்ற ஒருவரை பிடித்த தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

ByKalamegam Viswanathan

Jan 31, 2024

D1 தல்லாகுளம் குற்றப்பிரிவு தலைமை காவலர் 1589 சரவணன் ரோந்து பணியில் இருந்தபோது நேற்று நள்ளிரவில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் வளாகத்தில் இருந்து சந்தேகப்படியான ஒருவர் ஓடியபோது அவரை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில், அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் திருடியதாக ஒப்புக்கொண்டதன் பேரில், அவரிடமிருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தலைமைக் காவலரின் இத்துரித செயலை பாராட்டும் விதமாக மதுரை மாநகர ஆணையர் முனைவர் J. லோகநாதன் IPS., நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பண வெகுமதியும் கொடுத்து கௌரவித்தார்.