மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மதுரை மாநகர் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு. குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக தமிழக அரசிடம் இருந்து புதிதாக வழங்கப்பட்ட அதிநவீன கேமரா மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் இருசக்கர ரோந்து வாகனங்கள் 08. நகரின் வாகன நெருக்கடி மிகுந்த பகுதிகளில் போக்குவரத்து சீர் செய்யும் பணிக்காகவும் சாலை விபத்துப் பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள போக்குவரத்து காவல் மீட்பு வாகனங்கள்-02 மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் போது அவசர காலங்களில் காவல்துறையினர் விரைவாக செல்லக்கூடிய வகையில் கேமராக்கள் பொருத்திய அதிரடிப்படை QRT பொலிரோ நான்கு சக்கர வாகனங்கள்-03, மற்றும் மதுரை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட ரோந்து பணிக்காக நான்கு சக்கர பொலிரோ காவல் ரோந்து வாகனங்கள் உட்பட்ட 20 காவல் ரோந்து வாகனங்களை பொதுமக்களுக்கு விரைந்து சேவை செய்யும் பொருட்டு காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் போக்குவரத்து வனிதா ஆயுதப் படை துணை ஆணையர் திருமலை குமார். போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வன் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு காவல் உதவி ஆணையர் பெத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.