• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

மூன்று மகன்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது

ByAnandakumar

Mar 15, 2025

குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டியில் தனது மூன்று மகன்களை கடத்த முயன்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்

கரூர் மாவட்டம் குப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வி 45. இவர்களுக்கு பிரியங்கா 27, பிரியதர்ஷினி 25, பிரித்திகா 23. என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வன சரக்கத்தில் வனவராக வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்து வந்ததாகவும், இந்நிலையில் i natruralist வெப்சைட் மூலமாக பெங்களூரைச் சேர்ந்த கார்த்திக் 41 என்பவரின் ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 11ம் தேதி கார்த்தி மற்றும் அவரது மனைவி கிரிஷ்மா 39 உடன் காரில் வீட்டிற்கு நேரடியாக வந்து மூன்று மகள்களையும் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

இதற்கு கார்த்திகை செல்வியும் அவரது கணவர் ரத்தினகிரியும் தனது தங்களது மகள்களை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் உங்கள் மகள்கள் எங்களுடன் வர ஒத்துழைக்கிறார்கள் நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று கூறி தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.

மேலும் அவர் குறித்து விசாரிக்கவே அவர் பெங்களூரில் உள்ள ஒகானா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் அப்பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கு கார்த்திக் என்பவர் தங்களது பள்ளியில் வேலை செய்யவில்லை என கூறவே சந்தேகம் ஏற்பட்டு அவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து குளித்தலை காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்துள்ளனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கார்த்தி அவரது மனைவி கிருஷ்மா ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் அவர்களது பிஎம்டபிள்யூ காரினையும் பறிமுதல் செய்து குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்.