நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது காரைக்காலில் திருநள்ளார் நெடுங்காடு திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வரும் 29ஆம் தேதி ஏழை மாரியம்மன் கோயிலில் இருந்து கிளிஞ்சல் மேடு கடற்கரையில் கரைக்கப்படவுள்ளது.

இதனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்தில் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்று உற்சாகமாக கொண்டாட இருக்கின்றனர். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அந்த பகுதியில் விநாயகர் சிலை வைத்துள்ளார். நிர்வாகிகளிடம் இன்று போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ் எஸ் பி தலைமை நடைபெற்ற கூட்டத்தில் ஊர்வலம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய எஸ் பி சுப்பிரமணியன் உற்சாகத்துடன் பங்கேற்கும் இளைஞர்கள் பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்றும் போலீசார் அனுப்பி வைக்கும் பாதைகளில் பின்பற்ற வேண்டும் என்றும் இளைஞர்கள் உற்சாகம் பண்ணுவது முறைதான் அதன் ஒரு அளவிற்கு மட்டும் இருக்க வேண்டும் போலீசார் சொல்வதை வைத்து நீங்கள் என்ஜாய் பண்ணினால் எந்த பிரச்சனை இல்லை என்றும் தொடர் பிரச்சனை செய்யும் நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதுடன் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

பின்னர் இளைஞர்களை எஸ் பி சுப்பிரமணியன் வரவழைத்து கூட்டத்தில் போலீசார் சொல்வதுடன் ஒழுங்கு முறையாக நடப்போம் என்று சில இளைஞர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார். பின்னர் முன்னணி இந்து முன்னணி காரைக்கால் நகர தலைவர் ராஜ்குமார் பேசுகையில் பல ஆண்டுகளாக காரைக்கால் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் விதிமுறைகளுடன் வைக்கப்பட்டு இருந்து வருகிறது. இந்த முறை சில அரசியல் காரணங்களுக்காக விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதிகளிலே சிலர் பிரச்சினை தூண்டும் வகையில் சிலை வைத்துள்ளனர்.

இதனால் இருதரப்புக்கு இடையே பெறும் பிரச்சினை ஏற்பட்டு பெரும் அசம்பாவிதத்தில் முடியும் என்றும் இதனால் போலீசார் ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி வழங்கிய விநாயகர் சிலை உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் புதிதாக உள்ளவர்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன் மற்றும் திருநள்ளார் கண்காணிப்பாளர் முருகையன் காவல் ஆய்வாளர்கள் புருஷோத்தமன் மரிய கிறிஸ்டின் பால் மற்றும் மத்தினி உள்ளிட்ட காவலர்களுடன் ஏராளமான ஊர்வலம் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.